"இந்தியா எல்லையில் படைகளைக் குவிப்பதால் பதற்றம் தணியாது" -சீனா
இந்தியா எல்லையில் படைகளைக் குவிப்பதால் பிரச்சினை தீராது என்று சீனா தெரிவித்துள்ளது. எல்லையில் அது அமைதியை ஏற்படுத்த முடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை காரணமாக மேற்கு எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பத்தாயிரம் வீரர்களை தங்கள் பக்கம் இந்தியா திருப்பி விட்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
உத்தர பாரதம் எனப்படும் பரேலியை ஒட்டிய எல்லைப்பகுதியில் இந்தியாவின் வான் பாதுகாப்பு, பயிற்சி, பீரங்கிகள் போன்ற ஆயுதக்குவிப்பு போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சீனா கூறி வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், மாவோ நிங். எல்லையில் இந்தியாவுடன் அமைதியைக் காக்க சீனா உறுதியளித்திருப்பதாக கூறினார்.
Comments